இலங்கை

சொந்த வயலிலேயே பிரிந்த உயிர் ; தமிழர் பகுதியில் சோகம்

Published

on

சொந்த வயலிலேயே பிரிந்த உயிர் ; தமிழர் பகுதியில் சோகம்

மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிராமத்தில் சனிக்கிழமை (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளர் காணப்பட்டுள்ளார்.

Advertisement

சனிக்கிழமை அப்பகுதியில் அமைந்துள்ள அவரது வயலுக்குள் வேளாண்மையினை பார்ப்பதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளார்.

துவிச்சக்கர வண்டியை குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது வேளாண்மைச் செய்கையை பார்வையிட்டுள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வயலுக்குள்ளேயே மரணம் அடைந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

 உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல்கூற்று பரிசோதனை முடிவுகளின்படி மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version