சினிமா
“ஜனநாயகன் ” படப்பிடிப்புக்கு தளபதி திடீர் பிரேக்..!
“ஜனநாயகன் ” படப்பிடிப்புக்கு தளபதி திடீர் பிரேக்..!
இயக்குநர் h. வினோத் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் “ஜனநாயகன் ” படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் விஜய் தற்போது அரசியலில் மிகவும் பிஸியாக இருப்பதால் படப்பிடிப்பு வேலைகளுக்கு பிரேக் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஒரு கால் சினிமாவிலும் ஒரு கால் அரசியலிலும் வைத்திருப்பதால் திடீரென ஒரு வாரம் பிரேக் விட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்ததது. இந்த நிலையில் தற்போது இவரது இடைவேளையினால் வெளியீட்டு தேதி பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் விஜய் தனது பிரச்சார வேலைகள் கூட்டங்களை ஆன்லைனில் வீடியோ காலில் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பான விமர்சனங்களிற்கு ஆளாகியுள்ளது.