இலங்கை

நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

Published

on

நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

புத்தளம், வேரகல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி திறக்கப்பட்டமையால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் சென்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (26 ) இடம் பெற்றுள்ளது.

Advertisement

சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து தனது நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்றிருந்த வேளை மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த போது நீரின் வேகம் அதிகரித்து அள்ளுண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட சடலம் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை எவ்வித முன் அறிவித்தல் இன்றி வேரகல நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமை தொடர்பாக நீர் தேக்கத்தின் பொறியியலாளர் மீது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version