இலங்கை

மின் விளக்கை மாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

Published

on

மின் விளக்கை மாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

நாட்டின் இருவேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை பிரதேசத்தில் வசித்து வந்த 72 வயதுடைய பெண்ணொருவரும், கந்தபளை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Advertisement

சம்பவத்தன்று 72 வயதுடைய பெண் தனது வீட்டில் உள்ள மின் விளக்கை மாற்ற முயன்றபோது மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கந்தபளை முதியவர் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version