இலங்கை

7 வயது மாணவனின் பிறப்புறுப்பை கடித்த வளர்ப்பு நாய் ; இறுதியில் நேர்ந்த துயரம்

Published

on

7 வயது மாணவனின் பிறப்புறுப்பை கடித்த வளர்ப்பு நாய் ; இறுதியில் நேர்ந்த துயரம்

காலி தேசிய மருத்துவமனையில் ஏழு வயது பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (27) நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவர் கடந்த 24 ஆம் திகதி சுகவீனம் காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கடந்த மாதம், வீட்டில் இருந்த ஒரு வளர்ப்பு நாய் மாணவனின் பிறப்புறுப்பைக் கடித்துள்ளது. பின்னர் மாணவர் குடும்பத்தினரிடம் சொல்லாமல் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.

பின்னர், மாணவனின் உடல் நிலை மோசமடைந்ததால், சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காலி தேசிய மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version