விளையாட்டு
DC vs RCB Live Score Updates: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பலப்பரீட்சை
DC vs RCB Live Score Updates: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பலப்பரீட்சை
IPL 2025, DC vs RCB Live Cricket Score Updates: ஐ.பி.எல் 2025 தொடரின் 46-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.ஆங்கிலத்தில் படிக்க:இரு அணிகளுமே இந்த சீசனில் ஃபார்மில் இருப்பதால், இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முந்தைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருப்பார்.இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற கடுமையாக முயற்சிக்கும். டெல்லி கேப்பிடல்ஸின் பலம் வாய்ந்த மிடில் ஆர்டரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் பவர்-பிளே அதிரடி ஆட்டமும் இன்றைய போட்டியில் கவனிக்கத்தக்க அம்சங்களாக இருக்கும்.விராட் கோலி டெல்லி மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இங்கு 60-க்கும் அதிகமான சராசரியுடன் ஆறு அரைசதங்களை அடித்துள்ளார். அதேபோல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலும் இந்த சீசனில் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். இதனால், இந்த போட்டியில் எந்த வெற்றி பெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.