இலங்கை
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிறார் ரணில் விக்ரமசிங்க
இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிறார் ரணில் விக்ரமசிங்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் அவரால் முன்னிலையாக முடியாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு இன்று (28) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.