சினிமா

இளையராஜா பணத்தாசை பிடித்தவரா..? உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..!

Published

on

இளையராஜா பணத்தாசை பிடித்தவரா..? உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி..!

தமிழ் திரையுலகில் இசைஞானியாக அடையாளம் பெற்ற இளையராஜா குறித்து சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இளையராஜாவைப் பாதுகாப்பதாகவும், அவரது உண்மைத் தன்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையிலும் இந்தப் பேட்டி அமைந்திருந்தது.கடந்த சில காலமாக, இசைஞானி இளையராஜா மீது சில சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக பாடல் உரிமைகள், பண பரிமாற்ற விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் மூலம் அவரது பெயர் பல இடங்களில் பேசப்பட்டது. குறிப்பாக, “பணத்தாசை பிடித்தவர்” என்ற குற்றச்சாட்டு சிலர் வலைத்தளங்களில் முன்வைத்தனர்.இதற்கிடையில், குட் பேட் அக்லி திரைப்படம் தொடர்பான விவாதங்களும், இசை உரிமைகள் குறித்து வந்த கருத்துக்களும் இளையராஜாவை மீண்டும் சர்ச்சையில் ஆழ்த்தியிருந்தன. அந்தவகையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி இது குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “இளையராஜா சார் மிகவும் உயர்ந்த மனிதர். அவருடைய பாடலை பயன்படுத்தும் முன் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர் சுட்டிக்காட்டினாரே தவிர, அவரை பணத்தாசை பிடித்தவர் என்று கூறுவது தவறு.” என்றார்.மேலும், “இளையராஜா சார் பலரை உருவாக்கியவர். பணம் வாங்காமல் வேலை செய்து ராஜ்கிரண், ராமராஜன் போன்ற ஹீரோக்களை உருவாக்கியவர்.” என்றும் தெரிவித்திருந்தார். விஜய் ஆண்டனியின் இந்த நேர்காணல் தற்போது சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. இளையராஜா ரசிகர்கள் மற்றும் பல திரைஉலக பிரபலங்களும் இவருடைய வார்த்தைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version