இலங்கை
கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை
கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை
கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயில் முன்பாக பாய்ந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.