இலங்கை

கால்வாய்க்குள் விழுந்த மோட்டார் சைக்கிள் ; பலியான அதிபர்

Published

on

கால்வாய்க்குள் விழுந்த மோட்டார் சைக்கிள் ; பலியான அதிபர்

பதுளை, கந்தேகெதர பகுதியில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது மோட்டார் சைக்கிளில் பாடசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பதுளை அலுகொல்ல – கந்தேகெதர வீதியில் தியனாவல கோவிலுக்கு அருகில் வைத்து வேறொரு வாகனத்திற்கு இடமளிக்க முயன்ற போது கால்வாய்க்குள் விழுந்து உயிரிழந்ததாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உயிரிழந்தவரின் சடலம் கந்தேகெதர மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version