இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எழுந்துள்ள சிக்கல் ; பல முன்பதிவுகள் இடைநிறுத்தம்

Published

on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எழுந்துள்ள சிக்கல் ; பல முன்பதிவுகள் இடைநிறுத்தம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள படக் காப்பகம் மற்றும் தொடர்பு அமைப்பு (PAC அமைப்பு) கடந்த இரண்டு வாரங்களாக செயலிழந்துள்ளமையினால் சிடி (CT) மற்றும் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் பரிசோதனைகளுக்கான முன்பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணினி அமைப்பு வழங்குநருக்கு பணம் செலுத்தாமையினால் முழு தரவு சேமிப்பு வலையமைப்பும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, கதிரியக்க சேவைகளை நெறிப்படுத்த PAC என்ற அமைப்பை நிறுவப்பட்டுள்ளது.அதன் விளைவாக, சிடி, MRI மற்றும் பிற கதிரியக்க நோயறிதல்கள் தொடர்பான படங்கள் மற்றும் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சேமிக்கப்பட்டன, ரேடியோகிராஃபிக் படங்களில் படங்களை அச்சிடும் முந்தைய முறையை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பு செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கும், குறிப்பாக படப் பயன்பாடு தொடர்பான அதிக செலவுகளைக் குறைக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள வைத்தியசாலைகள் பின்பற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது PAC அமைப்பின் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க முன்கூட்டிய மற்றும் வருடாந்திர பராமரிப்பு செலவுகள் தேவைப்பட்ட இந்த அமைப்பு செயலிழந்துள்ளது.

இதன் விளைவாக, சிடி மற்றும் MRI பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, இது நோயாளிகளின் நோயறிதலுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிறைவு காண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களின் ஒன்றியம், சுகாதார அமைச்சர், சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உடனடியா தலையிட்டு, சேவைகளை விரைவில் மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சு வார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆங்கில ஊடகமொன்றுக்கு சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version