இலங்கை

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம்

Published

on

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம்

  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி துடுப்பெடுத்தாடியது.

Advertisement

இந்தப் போட்டியில் மும்பை அணி 215 ஓட்டங்கள் எடுத்த நிலையில், சேஸிங் செய்த லக்னோ 20 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசிய லக்னோ அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22ன் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது இரண்டாவது முறை என்பதால் ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சமும், இம்பேக்ட் வீரர் உள்பட அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ. 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version