இந்தியா

“ஆப்ரேஷன் சிந்தூர் என்பது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது இந்தியாவின் மனஉறுதி”: ராஜ்நாத் சிங்

Published

on

“ஆப்ரேஷன் சிந்தூர் என்பது ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது இந்தியாவின் மனஉறுதி”: ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் நடவடிக்கையில், எல்லையின் இருபுறமும் இதுபோன்ற தளங்கள் பாதுகாப்பாக இருக்காது என்பதை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் லக்னோவில் உள்ள பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை பிரிவை மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்துப் பேசிய ராஜ்நாத் சிங், இந்திய ஆயுதப் படைகள் தைரியத்தையும், வீரத்தையும் மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியதாக கூறினார். “எல்லையை ஒட்டியுள்ள தளங்களில் மட்டுமல்ல, பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையின் அதிர்வு ஒலி கேட்டது” என்று அவர் மேலும் கூறினார்.இந்திய எதிர்ப்பு பயங்கரவாத அமைப்புகளால் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய இராணுவம் நீதி வழங்கியதாகக் கூறிய ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்துர் “வெறும் இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் மூலோபாய மன உறுதியின் சின்னம்” என்றார். “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு எல்லையின் இந்த பக்கமோ அல்லது மறுபக்கமோ பாதுகாப்பாக இருக்காது என்பதை நாங்கள் நிரூபித்தோம்” என்று அவர் கூறினார்.இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளில் கட்டுப்பாட்டைக் காட்டியது என்றும், பாகிஸ்தானில் உள்ள குடிமக்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை என்றும் அவர் கூறினார். “பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கும் நோக்கத்துடன் இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது. நாங்கள் அவர்களின் குடிமக்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் இந்தியாவின் குடியிருப்பு பகுதிகளை மட்டுமல்ல, கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களையும் குறிவைக்க முயன்றது” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.2016 உரி தாக்குதலுக்குப் பிறகு நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த வான்வழித் தாக்குதல் மற்றும் இப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான பல தாக்குதல்கள், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதன் விளைவை முழு உலகிற்கும் காட்டியுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். “பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைத் தொடர்ந்து, புதிய இந்தியா எல்லையின் இந்த பக்கமோ அல்லது மறுபக்கமோ பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கும் என்பதை பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்” என ராஜ்நாத் சிங் கூறினார்.பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களில் தன்னிறைவு பெறுவது மட்டுமல்லாமல், அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பாதுகாப்பு துறையில் நாடு முதலீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்தார்.மே 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூரின் கீழ், கடந்த மாத பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version