இலங்கை

இந்தியா-பாகிஸ்தான் போரையடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்

Published

on

இந்தியா-பாகிஸ்தான் போரையடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்

இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீடு காரணமாக இரு நாடுகளும் சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து நேற்று முதல் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரும் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

உக்ரைன் உடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அதிபர் விளாாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருப்பதாகவும், மே 15ஆம் திகதி இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையிலான மோதலுக்கான மூல காரணங்களை அறிந்து அமைதியை மீட்டெடுக்க, உக்ரைன் உடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா பலமுறை போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டது என்றும், இருப்பினும் எங்கள் போர் நிறுத்த திட்டங்களுக்கு உக்ரைன் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

மே 15ஆம் திகதி நடக்கும் பேச்சு வார்த்தையில், இரு நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நிகழலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எனவே, இந்தியா–பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த ரஷ்யா – உக்ரைன் போரும் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version