இலங்கை
உள்ளூராட்சித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இடம்பெற்றுவரும் தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைகின்றது.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்ட தபால்மூல வாக்களிப்பு கடந்த 24ஆம் 25ஆம் திகதிகளில் நடைபெற்றது. அன்றைய தினங்களில் வாக்களிப்பை மேற்கொள்ளாதவர்களுக்கு நேற்றும், இன்றும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன்படி, இன்றுடன் தபால்மூல வாக்களிப்பு நிறைவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்துக்குப் பின்னர் மேலதிக நாள் எதுவும் தபால் வாக்களிப்புக்காக ஒதுக்கப்படாது என்று தேர்தல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.