பொழுதுபோக்கு
’ஊ சொல்றியா மாமா’ பாடல்: கவர்ச்சியான பெண்ணாக காட்டிக் கொள்ள நானே ஏற்றுக் கொண்ட சவால்; மனம் திறந்த சமந்தா
’ஊ சொல்றியா மாமா’ பாடல்: கவர்ச்சியான பெண்ணாக காட்டிக் கொள்ள நானே ஏற்றுக் கொண்ட சவால்; மனம் திறந்த சமந்தா
2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ அண்டாவா ஊ ஊ அண்டாவா” என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் இணையத்தையே சமந்தா ரூத் பிரபு கலக்கினார். சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில், கவர்ச்சியான பாடலில் நடனமாட தன்னை அணுகியது ஆச்சரியமாக இருந்ததாக சமந்தா கூறியுள்ளார். ஏனெனில், பெரும்பாலும் எளிமையான பெண்ணின் கதாபாத்திரங்களிலேயே நடித்ததால், அப்பாடலில் நடனமாக தன்னை அழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். மேலும், தான் ஒரு ‘நல்ல தோற்றமுடைய, கவர்ச்சியான பெண்’ என்று தன்னைப் பொய்யாகக் காட்டிக்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்க விரும்புவதாலேயே அந்தப் பாடலுக்கு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார். கலாட்டா பிளஸ் உடனான நேர்காணலில் சமந்தா கூறுகையில், “நான் மற்றவர்களுக்காக அறிக்கைகளை வெளியிடத்தான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்று மக்கள் நினைப்பது போல, பல சமயங்களில் நான் என்னை சவால் செய்யவே விஷயங்களைச் செய்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நான் என்னை ஒரு நல்ல தோற்றமுடைய, கவர்ச்சியான பெண்ணாக கருதியதில்லை. ஊ அண்டாவா எனக்கு அதை பொய்யாகக் காட்டி நடிக்க முடியுமா என்று பார்க்க கிடைத்த ஒரு வாய்ப்பு. நான் இதற்கு முன்பு அப்படி செய்ததில்லை. அது எனக்கான சவால். அதை நான் ஒரு முறை மட்டுமே செய்யலாம் என்று நினைத்தேன்” என்றார்.அந்தப் பாடலுக்காக தன்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட சமந்தா, “ஒரு சிறப்புப் பாடலுக்கும், மிகவும் கவர்ச்சியாகத் தோன்ற வேண்டிய ஒரு விஷயத்திற்கும் என்னை யார் கருதுவார்கள்? நான் எப்போதும் அழகான, கலகலப்பான, அடக்கமான கதாபாத்திரங்களையே ஏற்று நடித்திருக்கிறேன். அது நடனம் மட்டுமல்ல; அது மனப்பான்மை, தன்னம்பிக்கை மற்றும் தனது பாலியல் உணர்வில் வசதியாக இருப்பது பற்றியது” என்று கூறினார்.முன்னதாக ஒரு உரையாடலில், தனது முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவைப் பிரிந்திருந்த சமயத்தில்தான் தனக்கு “ஊ அண்டாவா ஊ ஊ அண்டாவா” பாடல் வாய்ப்பு வந்ததாக சமந்தா ரூத் பிரபு பகிர்ந்திருந்தார். மிஸ் மாலினியுடனான உரையாடலின்போது, தனது பிரிவின் மத்தியில் அந்தப் பாடலைச் செய்வதை அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்த்ததாகவும், ஆனால் தான் அதைச் செய்ததாகவும் சமந்தா கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நான் ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்? நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எல்லா கேலி, துஷ்பிரயோகம் மற்றும் வெறுப்பு மறைந்து, ஒரு குற்றம் செய்தவரைப் போல நான் மெதுவாகத் திரும்ப வரக் காத்திருக்கப் போவதில்லை. நான் அப்படிச் செய்யப் போவதில்லை. என் திருமணத்திற்கு நான் 100% கொடுத்தேன். அது சரியாக அமையவில்லை. ஆனால், நான் செய்யாத ஒன்றுக்காக என்னை நானே நொந்துகொண்டு குற்ற உணர்வு கொள்ளப் போவதில்லை” என்றார்.”ஊ அண்டாவா ஊ ஊ அண்டாவா” பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அப்பாடலை சந்திரபோஸ் எழுதியிருந்தார். இந்திராவதி சௌஹான் இந்தப் பாடலைப் பாடியிருந்தார்.