சினிமா
” எனக்கு 2 சோல்மேட் இருக்கிறார்கள்..! ” பாடகி கெனிஷா பேட்டி..
” எனக்கு 2 சோல்மேட் இருக்கிறார்கள்..! ” பாடகி கெனிஷா பேட்டி..
தற்போது இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு செய்தி தான் நடிகர் ரவிமோகன் மற்றும் ஜெனிஷா காதல் இது குறித்த பல விமர்சனங்கள் எழுந்தாலும் இருவரும் மிகவும் சாதாரணமாக இருந்து வருகின்றனர். மேலும் ரவிமோகனின் மனைவி தனது ஆதங்க அறிக்கையினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் இருந்தார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆர்த்திக்கு தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர்.இந்த நிலையில் தற்போது பாடகி ஜெனிஷா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சோல்மேட் குறித்து பேசியுள்ளார். சர்ச்சையின் மத்தியிலும் மிகவும் அமைதியாக இவர்கள் இருப்பது அனைவரையும் மிரளவைத்துள்ளது.மேலும் பாடகி “உலகத்தில் ஒருவருக்கு மொத்தம் 7 சோல்மேட் இருப்பதாக சொல்கின்றனர். இப்போதைக்கு எனக்கு 2 சோல்மேட் இருக்கிறார்கள். 2 பேரில் ஒருவர் பெண். நாங்க ரொம்ப வருஷமா கிளோஸா இருக்கோம். இரண்டாவது சோல்மேட் ரொம்பவே வித்தியாசமானவர். நாம படிச்சிருக்கோம், ரொம்ப சுதந்திரமா இருக்கோம் என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயத்துல அதை எல்லாம் மாத்தினவரு அவர் தான். எல்லா சோல்மேட்டும் நம்ம வாழ்க்கையை மாத்தி போட வந்தவங்க. எனக்கு பாதுகாப்பா, உறுதுணையா, மரியாதை கொடுப்பவரா, வெறுப்பு தன்மை இல்லாதவரா, எதிர்பார்ப்பு இல்லாதவரா, கோபம் இல்லாத ஒருத்தர் தான் என்னோட சோல்மேட் ” என கூறியுள்ளார்.