சினிமா

என் மகள் 7 வருஷமா கேன்சரால் உயிருக்காக போராடினா!! அதனாலதான் அதை செய்றேன்.. நடிகை கஸ்தூரியின் மறுபக்கம்..

Published

on

Loading

என் மகள் 7 வருஷமா கேன்சரால் உயிருக்காக போராடினா!! அதனாலதான் அதை செய்றேன்.. நடிகை கஸ்தூரியின் மறுபக்கம்..

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகர்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி சங்கர். கதாநாயகியாக நடித்து வந்த கஸ்தூரி, குணச்சித்திர ரோலில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஒருசில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம், கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது DD நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நடித்துள்ளார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய மகளுக்கு இரத்த புற்றுநோய் வந்தபோது தனக்கு ஏற்பட்ட வலி பற்றி பகிர்ந்துள்ளார். அதில், மரணத்தை 3 முறை சந்தித்து இருக்கிறேன். 2 முறை தோத்துவிட்டேன். ஒரு முறை மரணம் தோத்துப்போச்சு, என் பொண்ணை மரணம் தொட வரும் போது நாங்கள்விடவில்லை, அதற்கு என் கணவரும் காரணம், அவர் தான் என் மகளின் உயிரை காப்பாற்றியதாக நம்புகிறேன்.நான் என்ன பண்ணனும் என்று கேட்டால், நீ இருந்தால் போதும் என்று இருந்தேன். என்னுடைய கனவு, என் பொண்ணு பெரியவளாகணும் என்று, அது இப்போது நடந்துவிட்டது. என்னை பெற்றவர்களை இறந்தபோது நான் தைரியமாக இருந்தேன். நான் பெத்த மகள் உயிருக்கு போராடும் போது பயமாக இருந்தது.எல்லாவிதத்திலும் நம் பிறைவிக்கு என்ன இருக்கு, நம் குழந்தையை காப்பாத்ததானே நாம். அதனால் தான் மனு மிஷன் என்பதை ஆரம்பித்தேன். கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து உதவுகிறோம். மருத்துவமனையில் கேன்சரால் இறந்தவர்களை நான் பார்த்திருக்கிறேன்.என் பொண்ணுக்கு இரத்த புற்றுநோய் வந்தது. 7 வருடத்திற்கு மேல் இருந்தது. அவள் வாழ்க்கையில் பாதி அதிலேயே போய்விட்டது. எங்களுக்கே அப்படி என்றால் சாதாரண மக்கள், என்ன பண்ணுவாங்க. அதனால் தான் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் மனு மிஷன் ஆரம்பித்து உதவுகிறோம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version