சினிமா

எப்போ குழந்தை பெத்துக்க போறீங்கன்னு கேக்குறாங்க!! சாந்தனு – கிகி கொடுத்த விளக்கம்.

Published

on

எப்போ குழந்தை பெத்துக்க போறீங்கன்னு கேக்குறாங்க!! சாந்தனு – கிகி கொடுத்த விளக்கம்.

இயக்குநர் பாக்யராஜ் மகனாக தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகர் சாந்தனு, மனைவி கீர்த்தியுடன் சேர்ந்து யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.கடந்த 2015ல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்னும் குழந்தை ஏன் பெத்துக்கொள்ளவில்லை என்று பலர் கேட்கிறார்கள் என்பதற்கு சாந்தனுவும் கிகியும் சரியான விளக்கத்தை கொடுத்து கேட்பவர்களுக்கு நோஸ்கட் கொடுத்துள்ளனர்.அதில், எப்போது குழந்தை பெத்துக்க போறீங்கன்னு நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், அதற்கு நாங்கள் ஏன் முடிவு பண்ணனும், எப்போது என்று நீங்களே சொல்லுங்க.நான் பிரக்னட் ஆனதுக்கு அப்புறம், குழந்தை பெத்ததுக்கு அப்புறம் நீங்களே குழந்தையை பாத்துக்கோங்க. இதை நாங்கள் நக்கலாக பேசவில்லை, நீங்கள் நல்ல எண்ணத்தில் தான் கேட்கிறீர்கள்.ஆனால் சிலர் பேர், இதை என்ன ஒரு குழந்தை கூட பெத்துக்க முடியல, என்ன ஆடிட்டு இருக்க குதிச்சிட்டு இருக்கன்னு சொல்வாங்க. அது எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை. கடவுள் அதற்கான பிளானை தருவார்.எங்களுக்காக இப்படி கேட்பவர்களுக்கு நன்றி, ஆனால் வேறுவிதமாக கேட்பவர்கள் எங்களுக்கு வறுத்தமளிக்கிறது. அதை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள் அதனால் வெறுத்துவிட்டோம் என்று சாந்தனுவும் கிகியும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version