பொழுதுபோக்கு
கிராமத்து பெண்ணா?… நகரத்து பெண்ணா? – எனது சாய்ஸ் இது மட்டும் தான்; திருமணம் குறித்து சிம்பு பதில்
கிராமத்து பெண்ணா?… நகரத்து பெண்ணா? – எனது சாய்ஸ் இது மட்டும் தான்; திருமணம் குறித்து சிம்பு பதில்
தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, தன்னுடைய திருமணத்திற்கான பெண் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் சிலம்பரசன். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், தற்போது தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.ஆரம்ப காலத்தில் டி. ராஜேந்திரனின் மகனாக அறியப்பட்ட சிலம்பரசன் அதன் பின்னர் தனது திறமைகள் மூலமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதனிடையே, தன்னுடை உடல் எடை காரணமாக பல்வேறு உருவக் கேலிகளுக்கு ஆளான சிலம்பரசன், அதன் பின்னர் ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷனுடன் கம்பேக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.அடுத்ததாக சிம்பு நடித்த பத்து தல திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தினார். இது மட்டுமின்றி அடுத்தபடியாக பல்வேறு இளம் இயக்குநர்களுடைய திரைப்படங்களிலும் சிம்பு நடிக்க இருக்கிறார். குறிப்பாக, மணிரதனம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில், கமல்ஹாசனுடன் சிம்பு நடித்து வருகிறார். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சூழலில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்றார். அப்போது அவரிடம், கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் புரோபோஸ் செய்தால் யாரை ஏற்றுக் கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த சிலம்பரசன், “கிராமத்து பெண் , நகரத்து பெண் என்று பிரித்து பார்க்க வேண்டாம். பெண்கள் என்றால் பெண்கள் தான். ஜீன்ஸ் அணிந்த பெண்கள் கெட்டவர்களும் இல்லை; சுடிதாரில் இருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை. அப்படியே நான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அவர் பெண்ணாக இருந்தால் போது” என்று கூறினார்.