தொழில்நுட்பம்

சையனைடு விட 1,500 மடங்கு விஷம்: மிக ஆபத்தானது இந்த உயிரினம்!

Published

on

சையனைடு விட 1,500 மடங்கு விஷம்: மிக ஆபத்தானது இந்த உயிரினம்!

விலங்குகளின் உலகில் சில உயிரினங்கள் பற்கள் (அ) நகங்களை கொண்டிருக்காமலே மிக ஆபத்தானவையாக இருக்கின்றன. அவைகள் அதைவிட பயங்கரமான ஒன்றை தன்னுள் கொண்டுள்ளன. மிகக் குறைந்த அளவிலேயே கொல்லக் கூடிய அளவுக்கு  சயனைடு விட சக்திவாய்ந்த நஞ்சுகளை கொண்டுள்ளன.சயனைடு அதன் கொடிய விஷத்தன்மை காரணமாக பலர் அறிந்திருப்போம். ஆனால் சில விலங்குகள் அதைவிட சக்திவாய்ந்த நஞ்சுகளை தங்களுடன் கொண்டுள்ளன. இந்த நச்சுப்பொருட்கள் பெரும்பாலும் மற்ற விலங்குகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க (அ) தங்களுடைய இரையை பிடிக்க உதவுகின்றன. இயற்கையின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த சில உயிரினங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: The poison of this animal is 1,200 times stronger than cyanideதங்க விஷத் தவளை:கொலம்பியாவைச் சேர்ந்த தங்க விஷத் தவளைகள் பார்ப்பதற்குப் பளபளப்பாகவும் அழகாகவும் இருந்தாலும், நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானது. இதன் தோல் பட்ராக்கோடாக்சின் எனப்படும் நச்சுப்பொருளால் மூடப்பட்டிருக்கும். இது மனிதர்களை தாக்கினால் நரம்புகள் செயல்படுவதை நிறுத்தி பக்கவாதம் (அ) மரணத்திற்கு வழிவகுக்கும். பழங்குடி மக்கள் வேட்டையாட ஊதுகுழல் அம்புகளில் இந்தத் தவளையின் விஷத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.நீல வளைய ஆக்டோபஸ்:நீள வளையம் ஆக்டோபஸ் பார்ப்பதற்கு சிறிய அளவு, நீல நிறப் புள்ளிகளைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். இந்த ஆக்டோபஸ் மிகவும் ஆபத்தானது. ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் உள்ள பாறைக் குட்டைகளில் காணப்படும் இது டெட்ரோடோடாக்சின் என்ற விஷத்தைக் கொண்டுள்ளது. இந்த விஷம் தசைகளை முடக்கி சுவாசத்தை நிறுத்திவிடும். இதற்கு மருந்து எதுவும் இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ஒருமுறை கடித்தால் கூட மரணம் ஏற்படலாம்.முள் எலி மீன்:முள் எலி மீன்கள் ஆபத்து வரும்போது உடலை ஊதிப்பெரிதாக்கிக் கொள்வதற்குப் பிரபலமானவை. ஆனால் உண்மையான ஆபத்து அவற்றின் உள்ளேதான் உள்ளது. நீல வளைய ஆக்டோபஸில் காணப்படும் அதே கொடிய விஷமான டெட்ரோடோடாக்சின் இதன் உறுப்புகளில் உள்ளது. நேஷனல் ஜியோகிராஃபிக் தகவலின்படி, இந்த விஷம் சயனைடை விட 1,200 மடங்கு வலிமையானது. ஜப்பானில், முள் எலி மீன் (ஃபுகு) ஒரு சுவையான உணவு, ஆனால் அதை பாதுகாப்பாக சமைக்க சமையல் கலைஞர்கள் உயர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.கூம்பு நத்தை:இந்த நத்தைகள் பார்ப்பதற்குத் தீங்கு விளைவிக்காதவை போல் தோன்றலாம். ஆனால் அவை இரையைப் பிடிக்க விஷமுள்ள “கூம்பை” பயன்படுத்தும் திறமையான வேட்டைக்காரர்கள். அவற்றின் விஷம் தசை முடக்கத்தை ஏற்படுத்தலாம், சில சமயங்களில் மனிதர்களுக்கு மரணத்தை விளைவிக்கலாம். இதற்கு மருந்து இல்லை, எனவே சில இனங்களின் கொடுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்.பாக்ஸ் ஜெல்லிமீன்:இந்தோ-பசிபிக் கடலின் வெப்பமான கரையோர நீரில் மிதந்து செல்லும் பாக்ஸ் ஜெல்லிமீன்கள் நிமிடங்களில் மனித இதயத் துடிப்பை செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ளது. இதன் கொடுக்குகள் மிக வலிமிகுந்ததாகவும், வேகமாக செயல்படக் கூடியதாகவும் இருப்பதால், அவை கடலில் மிகவும் கொடியவையாகக் கருதப்படுகின்றன.பிரேசிலியன் வாண்டரிங் சிலந்தி”வாழைப்பழ சிலந்தி” என்றழைக்கப்படும் இந்த சிலந்தி ஆக்ரோஷமானது மற்றும் தசைப்பிடிப்பு மற்றும் அரிதான சமயங்களில் மரணம் உட்பட கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த விஷத்தைக் கொண்டுள்ளது. இது தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படுகிறது.டெத்ஸ்டால்கர் தேள்:அதன் பெயரைப் போலவே, டெத்ஸ்டால்கர் தேளின் கொடுக்கு மிகவும் வலிமிகுந்ததாகவும் ஆபத்தானதாகவும் இருக்கலாம், குறிப்பாக சிறு குழந்தைகள் (அ) உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு. வட ஆபிரிக்கா முதல் மத்திய கிழக்கு வரை உள்ள பாலைவனப் பகுதிகளில் காணப்படும் இந்த வகை தேள்களின் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தலாம்.ஸ்டோன் மீன்:பெரும்பாலும் கடல் தரையில் மறைந்திருக்கும் ஸ்டோன் மீன் உலகின் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த மீன் ஆகும். நீங்கள் தற்செயலாக இதன் மீது கால் வைத்தால், அதன் கூர்மையான முட்கள் விஷத்தை செலுத்துகின்றன. இது கடுமையான வலி, வீக்கம் மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தையும் ஏற்படுத்தும். இது பாறைகள் மற்றும் பவளப்பாறைகளுடன் கச்சிதமாக ஒன்றிணைந்து காணப்படும்.இன்லேண்ட் டைபன்:”கொடிய பாம்பு” என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட இந்த இன்லேண்ட் டைபனை மனிதர்கள் அரிதாகவே பார்க்கிறார்கள், ஆனால் அதன் விஷம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு முறை கடித்தால் 100-க்கும் மேற்பட்டவர்களைக் கொல்லும் திறன் கொண்டது. அதிர்ஷ்டவசமாக, இது கூச்ச சுபாவம் கொண்டது மற்றும் மனித தொடர்பைத் தவிர்க்கிறது.கொமோடோ டிராகன்:இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்த ராட்சத பல்லிகள் தங்கள் அளவு மற்றும் பலத்தை நம்பியிருக்கலாம், ஆனால் அவற்றின் கடியிலும் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்தம் உறைவதைத் தடுக்கும் விஷம் உள்ளது. கொமோடோ டிராகன் ஒருமுறை இரையை கடித்தவுடன், அந்த விலங்கு பலவீனமடைந்து சரிந்து விழும் நேரம் நெருங்கிவிடும்.இந்த உயிரினங்கள் எல்லாம் திகிலூட்டுவதாக இருந்தாலும், இதன் நச்சுப்பொருட்கள் பலவும் வலி நிவாரணி மற்றும் மருத்துவம் தொடர்பான ஆய்வுகளுக்கு ஊக்கமளித்துள்ளன. இயற்கையின் மிகவும் ஆபத்தான உயிரினங்கள் கூட நமக்குக் கற்றுக்கொடுக்க ஏதாவது வைத்திருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version