சினிமா

“ஜனநாயகன் ” படத்தில் தளபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா..?

Published

on

“ஜனநாயகன் ” படத்தில் தளபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா..?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். கே வி என் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வருகின்றது. விஜய்யுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அவர் “ஜனநாயகன்” படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று உறுதியாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது ஒரு அரசியல் படமாக உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் விஜய்யின் ரசிகர்கள் அவருடைய புதிய உருவத்தில் எவ்வாறு அமையும் என்பதை அறிந்துகொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர். இதுவே ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைசாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version