சினிமா
ஜனநாயகன் படப்பிடிப்பில் விபத்து.. ஒருவர் தலை மீது விழுந்த லைட்
ஜனநாயகன் படப்பிடிப்பில் விபத்து.. ஒருவர் தலை மீது விழுந்த லைட்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன்.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.இது விஜய்யின் கடைசி படம் ஆகும். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக நடிகர் விஜய், தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுள்ளார்.கொடைக்கானல் தாண்டிக்குடி என்ற இடத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் பெரிய லைட் தலை மீது விழுந்ததில் லைட் மேனுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது தகவல் வெளியாகியுள்ளது.