உலகம்

“தகுந்த உதவிகளைச் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும்” – பாகிஸ்தான் கோரிக்கை!

Published

on

“தகுந்த உதவிகளைச் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும்” – பாகிஸ்தான் கோரிக்கை!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 09/05/2025 | Edited on 09/05/2025

 

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஜம்மு – காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன.  பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. இந்நிலையில் இந்தியாவுடனான எல்லையில் நிகழும் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டுப் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக ராய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடைய தலைவர்களுடன் பாகிஸ்தானின் வெளியுறத்ததுறை அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பிரதமர் மூலம் தொலைப்பேசி வாயிலாகப் பேசி தாக்குதலை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சர்வதேச நாடுகளுடைய தலைவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பாகிஸ்தானுடைய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் செயலில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. அதற்குத் தகுந்த உதவிகளைச் சர்வதேச நாடுகள் செய்ய வேண்டும். இந்தியாவுடனான எல்லை பிரச்சனை  விவகாரத்தில்  ஒரு முடிவு ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • “கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

  • ஆபரேஷன் சிந்தூர்; இந்திய விமானப்படை வெளியிட்ட முக்கிய தகவல்!

  • முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை ஊட்டி பயணம்!

  • முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

  • இரு இளைஞர்கள் வெட்டி கொலை; போலீசார் தீவிர விசாரணை!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version