டி.வி
திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் 10ல் மீண்டும் VJ பிரியங்கா தேஷ்பாண்டே!! வீடியோ..
திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் 10ல் மீண்டும் VJ பிரியங்கா தேஷ்பாண்டே!! வீடியோ..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் VJ பிரியங்கா தேஷ்பாண்டே, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.சமீபத்தில், வசி என்பவரை திடீரென விமரிசையாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த பிரியங்கா, விஜய் டிவியில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் விஜய் டிவியில் இணைந்திருக்கிறார் பிரியங்கா. சூப்பர் சிங்கர் சீசன் 10ல் மீண்டும் மாகாபா ஆனந்துடன் தொகுத்து வழங்கியுள்ளார் பிரியங்கா.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் சசிகுமார் வந்துள்ள பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.