டி.வி
திருமணமான VJ பிரியங்காவுக்கு விஜய் டிவி கொடுத்த பரிசு..கலாய்த்த அறந்தாங்கி நிஷா..
திருமணமான VJ பிரியங்காவுக்கு விஜய் டிவி கொடுத்த பரிசு..கலாய்த்த அறந்தாங்கி நிஷா..
விஜய் தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்த தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பிஸியாக வலம் வந்தவர் திடீரென, தனது நீண்டநாள் காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அடுத்தடுத்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.திருமணத்திற்கு பின் பிரியங்கா தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான ஊ சொல்றியா..ஊ ஊ சொல்றியா நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்கள் வந்துள்ளனர்.அப்போது கரண்ட் எர்த் டாஸ்கின் போது எப்போரும் அதில் ஏறி நின்று எர்த்தானும் கதறினார்கள். பிரியங்கா, மகாபா கூட அந்த மிஷினில் ஏறி நின்று வலியால் துடித்தனர். கடைசியாக அறந்தாங்கி நிஷா பிரியங்காவிடம் உன்னுடைய கல்யாணத்துக்கு விஜய் டிவி சார்பாக இந்த மெஷின் தருகிறோம், கொண்டு போ என்று சொல்லியுள்ளார்.பிரியங்காவும் என் புருஷன் வசிக்கு கொடுக்கப்போகிறேன் என்று சொல்ல அனைவரும் சிரித்துள்ளனர். விஜய் டிவி சார்பாக இதை தருவதாக அறந்தாங்கி நிஷா சொன்னாலும், அவர் சார்பில் கிஃப் ஏதும் பிரியங்காவிற்கு கொடுக்கவில்லையா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.