உலகம்

தொடரும் போர் பதற்றம்: பாகிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா

Published

on

தொடரும் போர் பதற்றம்: பாகிஸ்தானின் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 பாகிஸ்தான், காஷ்மீரில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய இராணுவம் எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அவை சுட்டு வீழ்த்தப்பட்டன.

Advertisement

 இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான எப் 16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு நேற்று மாலை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

 பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய விமானப்படை நிலையமான சர்கோதா விமான தளத்திலிருந்து எப் -16 புறப்பட்டது. இந்திய வான் ஏவுகணை சர்கோதா விமான தளத்திற்கு அருகில் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய படை வட்டாரங்கள் தெரிவித்தன.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version