இலங்கை

நல்லை ஆதீனத்தின் திருவுடல் தீயுடன் சங்கமம்

Published

on

நல்லை ஆதீனத்தின் திருவுடல் தீயுடன் சங்கமம்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (02) திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

கொழும்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நல்லை ஆதீன குரு முதல்வர் கடந்த வியாழக்கிழமை பரிபூரணமடைந்தார்.

Advertisement

சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு கொண்டுவரப்பட்டு பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு திருவுடல் ஊர்வலமாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version