சினிமா

பிரபல தனியார் ஊடகத்தில் இருந்து விலகும் இரு பிரபலங்கள்!

Published

on

பிரபல தனியார் ஊடகத்தில் இருந்து விலகும் இரு பிரபலங்கள்!

விஜய் டிவியை கலர்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக சமீபத்தில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளிவந்தது.

மேலும் விஜய் டிவியில் பணிபுரிந்து வரும் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் நீயா நானா கோபி ஆகியோர் விஜய் டிவியில் இருந்து வெளியேறப்போவதாக கூறப்பட்டன.

Advertisement

விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, கலர்ஸ் நிறுவனம் புதிய நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் ஒளிபரப்பப்போவதாகவும் தகவல் வெளியாகின.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலையில், பிரபல ஆர்.ஜே ஒருவர் இதுகுறித்து உண்மை என்ன என்று பேசியுள்ளார்.

இதில் பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் இருந்து விலகவில்லை. அவர் திருமணத்தை முடித்தகையோடு ஹனிமூன் சென்றுள்ளார். ஹனிமூன் முடிந்து திரும்பும் பிரியங்கா, மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என அவர் கூறியுள்ளார்.

Advertisement

அதே போல் கோபிநாத்தும் விஜய் டிவியில் இருந்து விலக எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நீயா நானா நிகழ்ச்சி முடிவுக்கு வரவில்லை என்றும், கோபிநாத் விஜய் டிவியில் இருந்து வெளியேறவில்லை என்றும் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து தான் இந்த தகவலை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version