இலங்கை

முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ; டிரம்ப் தெரிவிப்பு

Published

on

முடிவுக்கு வரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் ; டிரம்ப் தெரிவிப்பு

  இந்தியாவும் பாகிஸ்தானும் ‘முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு’ ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் கூறிள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத்  தள  பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு  ஒப்புக்கொண்டதாகக் கூறுகிறார்.  

Advertisement

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்தியதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி என  தெரிவித்துள்ளார்.

அதேவெளை  இது தொடர்பில்  இந்தியா அல்லது பாகிஸ்தானிடமிருந்து உடனடி கருத்து எதுவும்  தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இரண்டாம் இணைப்பு

 அதேவேளை பாகிஸ்தானும் , இந்தியாவும் தற்போது போர் நிறுத்தை உறுதி செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்திய நிலையில் தற்போது இந்தியாவும் போர் நிறுத்ததை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version