இலங்கை

யாழில் உறவினர் வீட்டு விருந்தில் உணவருந்திய நபர் திடீர் மரணம்

Published

on

யாழில் உறவினர் வீட்டு விருந்தில் உணவருந்திய நபர் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்சோதி சதீஸ் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மையில் திருமணமான தம்பதியினர் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விருந்துக்கு சென்றுள்ளனர்.

விருந்தில் உணவருந்திய பின்னர், வீடு திரும்பிய தம்பதியினரில், கணவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

அதனை அடுத்து சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ், போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version