சினிமா

ராம் சரணின் ‘Game Changer’ படத்தால் சோகத்தில் மூழ்கிய தெலுங்கு திரையுலகம்.! நடந்தது என்ன.?

Published

on

ராம் சரணின் ‘Game Changer’ படத்தால் சோகத்தில் மூழ்கிய தெலுங்கு திரையுலகம்.! நடந்தது என்ன.?

தெலுங்கு சினிமா எப்பொழுதும் பிரமாண்டமான பட்ஜெட்டில் படங்களை உருவாக்கி திரையுலகை அதிரவைப்பது வழக்கம். அந்த வகையில் 2025ம் ஆண்டின் மிக முக்கியமான படமாக உருவாகியது தான் ‘Game Changer’.’வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜு, இந்திய சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், மற்றும் தெலுங்கு சினிமாவின் இளம் மாஸ் ஹீரோவான ராம் சரண் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளை வந்தடைந்தது.‘Game Changer’ படம் தியட்டர்களில் வெளியாகும் வரை ரசிகர்களிடம் அதிகளவான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. எனினும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. தியட்டரில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லை என்பதால், படக்குழு விரைவில் ஒரு முன்னணி OTT தளத்தில் படத்தினை வெளியிட்டது. ஆனால் அங்கேயும் ரசிகர்கள் தரப்பிலிருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.படக்குழு தனது கடைசி முயற்சியாக, ‘Game Changer’ படத்தை சிறப்பு நிகழ்ச்சியாக ஒரு முன்னணி டீவி சேனலில் ஒளிபரப்பியது. ஆனால் அதிலும் ரேட்டிங் மிகக் குறைவாகவே வந்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த கவலை அடைந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version