சினிமா
வசூலில் சாதனை படைத்த சூர்யாவின் “ரெட்ரோ”..! வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு..
வசூலில் சாதனை படைத்த சூர்யாவின் “ரெட்ரோ”..! வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு..
தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகரான சூர்யா மற்றும் தனித்துவமான கதைகள் சொல்லும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் ‘ரெட்ரோ’. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது 100 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளது.இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை சூடேற்றிக் கொண்டிருக்கின்றன.‘ரெட்ரோ’ ஒரு வெற்றிப் படம் மட்டும் அல்ல, அது சூர்யாவினை மீண்டும் சினிமாவிற்குள் கம்பேக் கொடுத்த படமாகவும் திகழ்கின்றது. அந்தவகையில் இப்புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் இது சூர்யாவின் படத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்று கூறிவருகின்றனர்.