இலங்கை
வீட்டினுள் பரவிய தீ ; எரிந்து கருகிய மூன்று பிள்ளைகளின் தந்தை
வீட்டினுள் பரவிய தீ ; எரிந்து கருகிய மூன்று பிள்ளைகளின் தந்தை
கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் இன்று (11) ஒருவர் தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் தனியாக இருந்ததாகவும், பின்னர் அவர் தீயுடன் வீட்டிலிருந்து வெளியே வந்து சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தாரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் சமையலறையில் ஒரு வெற்று பெட்ரோல் கலன் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.