வணிகம்
வீட்டுக் கடனை 5 வருசத்துல கட்டலாம்… இந்த ஸ்டெப்ஸ் மட்டும் செஞ்சா போதும்: ஆனந்த் ஸ்ரீனிவாசன் டிப்ஸ்
வீட்டுக் கடனை 5 வருசத்துல கட்டலாம்… இந்த ஸ்டெப்ஸ் மட்டும் செஞ்சா போதும்: ஆனந்த் ஸ்ரீனிவாசன் டிப்ஸ்
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மக்களின் கனவாக இருக்கிறது. இதற்காக வங்கியில் இருந்து கடன் பெற்று வீடு வாங்கலாம் என்ற யோசனை பலருக்கு இருக்கும். ஆனால், வீட்டுக் கடன் பெறும் போது அதனை முற்றிலும் செலுத்தி முடிக்க குறைந்தது 20 முதல் 25 ஆண்டுகள் வரை ஆகும் என்ற தயக்கம் பலருக்கும் இருக்கும்.அந்த வகையில், வீட்டுக் கடனை சுமார் 5 ஆண்டுகளில் எவ்வாறு அடைக்கலாம் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இதனை பின்பற்றினால் எளிதாக வீட்டுக் கடனை அடைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் வங்கிக்கு சென்று அதன் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், நாம் எத்தனை ஆண்டுகள் இ.எம்.ஐ கட்ட வேண்டும் என்று முதலில் தெரிந்து கொள்வது அவசியம் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார்.அந்த, இ.எம்.ஐ தொகையுடன் 10 சதவீதம் கூடுதலாக செலுத்தினால் எத்தனை ஆண்டுகளில் கடனை கட்டி முடிக்கலாம் என்று கணக்கிட்டு பார்க்க வேண்டும். அத்துடன், போனஸாக ரூ. 2 லட்சம் வரை செலுத்தும் வழிமுறையை பரிசீலிக்கலாம் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பரிந்துரைக்கிறார்.இது தவிர ஒவ்வொரு ஆண்டும் பணியில் கிடைக்கும் ஊதிய உயர்வின் படி, எவ்வளவு தொகையை கூடுதலாக வீட்டுக் கடனில் செலுத்த முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய இ.எம்.ஐ-யை எப்படி அதிகரிக்கலாம் என்று கணக்கிட வேண்டும்.இது போன்ற பொருளாதார திட்டமிடல் இருக்கும்பட்சத்தில், நாம் வங்கியில் இருந்து பெற்ற வீட்டுக் கடனை சுமார் 5 ஆண்டுகளில் அடைத்து விடலாம் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகிறார். இதற்காக ஏறத்தாழ 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு வட்டி செலுத்தி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.நன்றி – TechwithNaveen(TWN) Youtube Channel