சினிமா

“ஸ்குவிட் கேம்” தொடரின் இறுதிக் கட்டம் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட அப்டேட்.!

Published

on

“ஸ்குவிட் கேம்” தொடரின் இறுதிக் கட்டம் எப்போது தெரியுமா.? படக்குழு வெளியிட்ட அப்டேட்.!

2021ம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானதும் உலகெங்கும் உள்ள மக்களின் மனங்களைக் கவர்ந்த தென் கொரியத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. இது மனித உறவுகள் மற்றும் பணம் தொடர்பான கருத்துக்களை விவாதித்த இந்த தொடர், ஒவ்வொரு பார்வையாளரின் மனதையும் பதற வைத்தது. 9 எபிசொட் கொண்ட இதனை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கியிருந்தார்.‘ஸ்குவிட் கேம்’ தொடர், வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து, நெட்பிளிக்ஸ் வரலாற்றில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற தொடராக உயர்ந்தது. Netflixல் சாதனை படைத்த இந்தத் தொடர் பல சர்வதேச விருதுகளைக் கைப்பற்றியிருந்தது.இந்த தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் எதிர்பார்த்த சீசன் 2 கடந்த 2024 டிசம்பரில் வெளியாகியது. அப்போதும் எதிர்பார்த்த அளவுக்கு அதே பரபரப்பையும் பெற்றது. பல புதிய கதாப்பாத்திரங்கள், புதுமையான விளையாட்டுக்கள் மற்றும் சஸ்பென்ஸான திருப்பங்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றிருந்தது.இப்போது அனைவரும் எதிர்பார்த்த ‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ பற்றி நெட்பிளிக்ஸ் அதிகார பூர்வமாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஜூன் 27, 2025 அன்று இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி சீசன் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version