பொழுதுபோக்கு
2 வருடம் இடைவெளி; மீண்டும் சின்னத்திரையில் பிக்பாஸ் பிரபலம் என்ட்ரி: காரணம் இதுதானாம்!
2 வருடம் இடைவெளி; மீண்டும் சின்னத்திரையில் பிக்பாஸ் பிரபலம் என்ட்ரி: காரணம் இதுதானாம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற நடிகர் ராஜூ ஜெயமோகன், தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராக பங்கேற்றுள்ள நிலையில், மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன் என்பது குறித்து நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.2012-ம் ஆண்டு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், ஒரு கல்லூரியின் கதை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராஜூ ஜெயமோகன். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். குறிப்பாக இவர் நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் இவரின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்ற ராஜூ, சீரியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கடைசிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பிறகு, ராஜூ வீட்ல பார்ட்டி, பிக்பாஸ் கொண்டாட்டம், பிபி ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ராஜு 2023-24 காலக்கட்டத்தில் சின்னத்திரையில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ராஜூ தற்போது பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது 2 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ள ராஜூ, துணை முதல்வர், மனிதன், நட்புன்னா என்னானு தெரியுமா? முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் டைட்டில் வின்னர்க்கு பின் பல படங்களில் நடிப்பா என்று எதிர்பார்க்கப்பட்டது.டான் படத்தில் மட்டும் நடித்த அவர், 2 வருட இடைவெளிக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள பன் பட்டர் ஜாம் படமும் சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது. இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ராஜூ, மக்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள ஒரு பெரிய ப்ளாட்பார்ம் தேவைப்படுகிறது. அதனால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.