சினிமா

அஜித் குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த முக்கிய பிரபலம்.! யார் தெரியுமா?

Published

on

அஜித் குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த முக்கிய பிரபலம்.! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடனத்தையும், நடிப்பையும் தாண்டி மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் பெயர் என்றால் அது ராகவா லாரன்ஸ். நடிகர், இயக்குநர் என பன்முக திறமைகளுடன் கலந்திருக்கும் இவர், திரைத்துறைக்கு வெளியிலும் தனது மனிதநேய செயல்களால் அனைவரையும் ஈர்த்து வருகின்றார். அவரது கருணை மனப்பான்மை, சமூக சேவை செய்யும் குணம் என்பவற்றால் அனைவரது மனதையும் நன்கு கவர்ந்தார். சமீபத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்திற்கு, ராகவா லாரன்ஸ் தனது உதவிக் கரத்தை நீட்டியதன் பின்னணி, உண்மையிலேயே கண்களை கலங்க வைக்கும் வகையில் காணப்பட்டது. அந்த குடும்பம், தவறுதலாக 1 லட்சம் பணத்தை இழந்தனர். அவர்கள் அன்றாட வாழ்வாதாரத்தையே இழந்து குழப்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தனர்.இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன் அதனைப் பார்த்த லாரன்ஸ் அந்த குடும்பத்தை நேரில் அழைத்து வந்து, பணத்தை அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். இதே நேரத்தில், சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் ராகவா லாரன்ஸ் தனக்கும், தல அஜித்துக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். “ஒருமுறை நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குநர் சரண் அவர்களுடன் சென்று ஒரு கதையை அவர் முன் கூறினேன். அதைக் கேட்டதும் அஜித், ‘சூப்பரான கதை..! ஆனால் உங்களுடைய கதாப்பாத்திரத்தை என் கதாப்பாத்திரத்தை விட வலிமையாக எழுதுங்கள்’ என்று கேட்டார்.” என லாரன்ஸ் கூறினார்.இது ஒரு நடிகர் மற்றொரு நடிகருக்கு கூறும் வார்த்தையல்ல, இது அவரது அழுத்தமான மனப்பான்மையையும் மற்றவர்களை உயர்த்தும் எண்ணத்தையும் பிரதிபலிக்கின்றது. இது மட்டுமல்ல, அஜித், லாரன்ஸ் புதிய கார் வாங்கியதை அறிந்து, நேரில் வந்து அந்த காரில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து கொடுத்து ஆசிர்வதித்த சம்பவமும் அவரை பெரிதும் கவர்ந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version