இலங்கை

அரச ஊழியர்களுக்கு மே மாதம் மிகவும் சிக்கல் நிறைந்தது!

Published

on

அரச ஊழியர்களுக்கு மே மாதம் மிகவும் சிக்கல் நிறைந்தது!

அரச ஊழியர்களுக்கு மே மாதம் மிகவும் சிக்கல் நிறைந்தது. ஏப்ரலில் சித்திரைப் புதுவருடம் வருவதால் மக்கள் சந்தோஷமாக அத்தினத்தை கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஏப்ரல் பத்தாம் திகதி சம்பளத்தை அரசாங்கம் வழங்கிவிடும். 

அடுத்த சம்பளம் மே மாதம் 25ம் திகதி. இடைப்பட்ட நாட்கள் 46. கையில் காசு இருப்பதனால் ஏப்ரல் இருபதாம் திகதியுடன் பணம் காலியாகிவிடும். இடையில் முஸ்லிம் ஆக்கள் நுவரெலியாவுக்கு ஒரு சுற்றுலாவும் செல்ல வேண்டும். 

Advertisement

அது கடமையாக்கப்பட்டுள்ள விடயம். ஏப்ரல் முடிவு, மே மாதம் தொடக்கத்திலிருந்து சாதாரண அரச ஊழியர்களின் நிம்மதி தொலைக்கப்பட்டுவிடும். பேரவலம். மேலதிக செலவுகளும் வந்துவிடும். சீட்டுக்காசி வேறு. சீட்டுக்காசிக்காரர் ஏப்ரல் 25ம் திகதிதான் வருவார். 

அவரிடம் எந்த நியாயமும் எடுபடாது. குடும்ப உறவுகள் சின்னாபின்னமாகி மனைவி ஒரு பக்கம் கணவன் ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் என டாம்டூம் என வீட்டு நிலமை இருக்கும்.
நான் தொடர்ந்து இந்த விடயத்தை பேசிவருகிறேன். 

எந்த அரசும் கவனத்தில் கொள்வதாக இல்லை. ஏதாவது துறைசார்ந்தவர்கள் இதற்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
சம்பளத்துடன் கிம்பளம் பெறும் அர்ப்பணிப்புமிக்க ஊழியர்கள் இந்த வகையறாவுக்குள் வரமாட்டார்கள். இந்தச் சம்பளம்தான் கதி என இருப்போரை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று போயா விடுமுறை தினம். 

Advertisement

நாளை வெசாக் தினம். சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் என தொடர் விடுமுறைகள். என்ன செய்வது. வீட்டுக்கூரையில் இருக்கும் மோட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

– முகநூல் பதிவு-

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version