சினிமா
இந்தியன் 3 படப்பிடிப்பு பேச்சு வார்த்தை..! பதிலளிக்காமல் நழுவிய லைகா உரிமையாளர்..
இந்தியன் 3 படப்பிடிப்பு பேச்சு வார்த்தை..! பதிலளிக்காமல் நழுவிய லைகா உரிமையாளர்..
முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் வெற்றி படங்களே அதிகம் ஆனால் இவர் சமீபத்தில் இயக்கும் படங்கள் அதிகம் வசூலை கொடுக்கவில்லை அந்த வரிசையில் இந்தியன் 2 காணப்படுகின்றது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதைவிட படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பித்து இடையில் நிறுத்தப்படுள்ளது.இந்த நிலையில் தற்போது ஷங்கர் லைகா நிறுவனத்தின் முகாமையாளர் சுபாஸ்கரனை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையின் போது சுபாஸ்கரன் எத்தனை நாள் இன்னும் சூட்டிங் இருக்கு பட்ஜெட் இருக்கு என கேட்டதற்கு ஷங்கர் இன்னும் 30 நாட்கள் படம் எடுக்க இருக்கு பட்ஜெட் சொல்ல தெரியவில்லை என கூறியுள்ளார்.இதற்கு அவர் படம் எடுக்க ஆரம்பிக்கலாமா இல்லையா என பதில் அளிக்காமல் நழுவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிறுவனம் தற்போது தயாரித்த அனைத்து படங்களும் எதிர்பார்த்த லாபத்தினை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.