இலங்கை
இளநரை பிரச்சனையா? நிரந்தர தீர்வு பெற இதை செய்து பாருங்க
இளநரை பிரச்சனையா? நிரந்தர தீர்வு பெற இதை செய்து பாருங்க
பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. பரம்பரை ஜீன் பிரச்சனை,மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு,தைராய்டு பிரச்னைகள்,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மது,புகை, ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் உள்ளிட்ட காரணங்களால் இளநரை வருவதாக கூறப்படுகிறது.
முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இளநரை சரி செய்வதற்கான பொதுவான சில வழிமுறைகள் உள்ளன அவற்றை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
முதலில் ஒரு தோல் மருத்துவரை அணுகி, முடி நரைப்பதற்கான சரியான காரணத்தைக் கண்டறிவது முக்கியம். அது தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்வது முடியின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். குறிப்பாக வைட்டமின் B12, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்
இந்த பிரச்சினைக்கு இயற்கையான தீர்வு காண நெல்லிக்காய், மருதாணி, கரிசலாங்கண்ணி போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது சிலருக்கு பலன் அளிக்கலாம்.
ஆனால், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இவற்றை முயற்சிப்பது நல்லது. சரியான காரணத்தைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும்.
யோகா, தியானம் போன்ற தளர்வான பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும். புகைபிடிப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை நிறுத்துவது நல்லது.அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் இரசாயனங்கள் நிறைந்த ஹேர் தயாரிப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் முடியைப் பாதுகாக்கவும்.
மேலும் நெல்லிக்காய் முடியை கருமையாக்கவும், அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவலாம். அல்லது நெல்லிக்காய் எண்ணெயை சூடாக்கி தலைக்கு மசாஜ் செய்யலாம்.