சினிமா
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 4வது இறுதி சுற்று போட்டியாளர் யார் தெரியுமா..
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 4வது இறுதி சுற்று போட்டியாளர் யார் தெரியுமா..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு வருகிறார்கள்.இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ன் இறுதி சுற்று போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது.அதில் முதல் இறுதிச்சுற்று போட்டியாளராக ஆத்யாவும், 2வது இறுதிச்சுற்று போட்டியாளராக சாரா சுருதியும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.கடந்த வாரம் 10 ஆம் தேதி சனிக்கிழமை எபிசோட்டின் போது 3வது இறுதி சுற்றுப்போட்டியாளராக ஸ்பாட் செலக்ஷன் மூலம்நஸ்ரின் தேர்வு செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நடந்த எபிசோட்டில் யாரும் எதிர்பாராத வண்ணம் 4வது இறுதி சுற்று போட்டியாளர் தேர்வு நடந்துள்ளது.அந்தவகையில் 4வது இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது 4வது ஃபைனலிஸ்ட் போட்டியாளராக லைனட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.யாரும் எதிர்ப்பார்க்காத இந்த தேர்வால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருந்து லைனட்-க்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.