சினிமா
“சூர்யா படம் ரிலீஸ் ஆனால் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்..” பதிலடி கொடுத்த ரசிகர்..
“சூர்யா படம் ரிலீஸ் ஆனால் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்..” பதிலடி கொடுத்த ரசிகர்..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது சூர்யாவை வைத்து “ரெட்ரோ” திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இத் திரைப்படம் மே முதலாம் திகதி வெளியாகி வசூல் ரீதியில் சாதனை படைத்து வருகின்ற நிலையில் மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் சமூகவலைத்தளப்பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றது .”ரெட்ரோ” திரைப்படம் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது வரை இந்த படம் உலகளவில் 95 கோடி வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த நிலையில் ரெட்ரோ படம் ஓடிய தியேட்டர்களில் கார்த்திக் சுப்புராஜ் விசிட் செய்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் சூர்யா படம் ரிலீஸ் ஆனால் மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் கொட்டுகின்றனர் என கேட்டார். உடனே அவர் சூர்யா சார் பெயரை சொன்னாலே அரங்கம் அதிருது. இதெல்லாம் தூசி மாதிரி கண்டுக்காதீங்க என அசால்ட்டாக பதிலளித்தார்.