விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு

Published

on

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல்  ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஆதரவு தெரிவிக்கும் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளியாகி 2 மணி நேரத்திற்குள், கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோகித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக தெரிவித்தார். கேப்டன் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version