இலங்கை

திடீரென சடுதியாக அதிகரித்த மரக்கறியின் விலை

Published

on

திடீரென சடுதியாக அதிகரித்த மரக்கறியின் விலை

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழை என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக தக்காளி, கோவா, கிழங்கு, கறிமிளகாய், பச்சை மிளகாய், கத்தரிக்காய், போஞ்சி போன்ற காய்கறிகளின் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறைந்தளவு உற்பத்திகளே விற்பனைக்காக சந்தைக்கு வந்துள்ளதுடன் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

Advertisement

இன்றைய சந்தை நிலவரப்படி கத்தரி, கரட், போஞ்சி, பறங்கிக்காய் , கறி மிளகாய், தக்காளி என்பன 1 கிலோகிராம் ரூபாய் 600 தொடக்கம் 650 வரை விற்கப்படுவதுடன் லீக்ஸ் , பீட்ரூட் , பயிற்றங்காய் என்பன 1 கிலோகிராம் ரூபாய் 500 இற்கு விற்கப்படுகின்றன.

இவ்விலை அதிகரிப்பு இன்னும் ஒருசில மாதங்கள் தொடரலாம் என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version