சினிமா
” திருப்பூரில் தேங்காய் பன்னுக்கு அலைந்தேன்” மேடையில் கண்கலங்கி பேசிய நடிகர் சூரி..!
” திருப்பூரில் தேங்காய் பன்னுக்கு அலைந்தேன்” மேடையில் கண்கலங்கி பேசிய நடிகர் சூரி..!
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பரோட்டா சூரியாக சூப்பர் காமெடி நடிகராக வலம் வந்த இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து கருடன் படத்திலும் நடித்தார்.தற்போது படவா ,ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் மாமன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப் படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாமன் திரைப்பட விழாவில் எமோஷனலாக பேசியுள்ளார்.அதாவது “திருப்பூரில் தேங்காய் பன்னுக்கு அலைந்தேன். இன்று அதே திருப்பூரில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது பெருமையாக உள்ளது நான் பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த மரியாதை இது ” என மேடையில் கண்கலங்கி பேசியுள்ளார்.