இலங்கை

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட மற்றுமொரு சலுகை

Published

on

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட மற்றுமொரு சலுகை

நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் மற்றும் பிற தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டைக் குறைத்து விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை செயலாளர் நாயகத்திற்கு வரம்பற்ற எரிபொருள் வழங்கப்பட்டது ஆனால் இனிமேல் மாதத்திற்கு 220 லிற்றர் எரிபொருள் வழங்கப்படும்.

Advertisement

மேலும், பிரதிச் செயலாளர் பெறும் எரிபொருளின் அளவும் மாதத்திற்கு 165 லிற்றர் எரிபொருளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் துறைத் தலைவர்கள் பெறும் எரிபொருளின் அளவு மாதத்திற்கு 135 லிற்றர் எரிபொருளாகவும், செயலாளர் நாயகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பெறும் எரிபொருளின் அளவு மாதத்திற்கு 115 லிற்றர் எரிபொருளாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாடுகள் 2 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தலைவர்கள் கடந்த காலங்களில் அதிகமாக எரிபொருளைப் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களையடுத்து, அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர எரிபொருள் கொடுப்பனவைக் குறைக்க நாடாளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version