இலங்கை

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பாப் கூப்பர் காலமானார்

Published

on

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பாப் கூப்பர் காலமானார்

 அவுஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பாப் கூப்பர் இன்று (11) காலமானார்.

1940 ஆம் ஆண்டு மெல்போர்னில் பிறந்த அவருக்கு இறக்கும் போது 84 வயது.

Advertisement

1964-68 வரை அவுஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரான கூப்பர், தனது நாட்டுக்காக 27 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

திறமையான இடது கை துடுப்பாட்ட வீரரான இவர், அவுஸ்திரேலியாவுக்காக 46 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 2061 ட்டங்கள் எடுத்துள்ளார்.

இதில் 5 சதங்களும் 10 அரைசதங்களும் அடங்கும்.

Advertisement

1966 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த முச்சத இனிங்ஸ் அவரது தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சமாகும்.

சுமார் 12 மணி நேரம் மைதானத்தில் இருந்து கொண்டே அவர் அடித்த முச்சதம், நாட்டில் முச்சதம் அடித்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை அவருக்கு அளித்தது.

2003 ஆம் ஆண்டு சிம்பாப்வேக்கு எதிராக மேத்யூ ஹைடன் 380 ஓட்டங்கள் எடுக்கும் வரை அவுஸ்திரேலியாவில் முச் சதம் அடித்த ஒரே அவுஸ்திரேலியர் கூப்பர் ஆவார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version