நக்கீரன் செய்திப்பிரிவு
Photographer
Published on 12/05/2025 | Edited on 12/05/2025
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது.
இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகாமலே இருந்து வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜூலை 4ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அதன் வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரிலீஸ் தேதி வெளியானதால் படத்தின் டீசர், ட்ரைலர் உள்ளிட்ட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராம் – சிவா கூட்டணி புதுமையாக இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.