டி.வி

” விபத்தில் சிக்கிய முத்துவின் கார்..!” பரபரப்பான முடிவுடன் சிறகடிக்க ஆசை…

Published

on

” விபத்தில் சிக்கிய முத்துவின் கார்..!” பரபரப்பான முடிவுடன் சிறகடிக்க ஆசை…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவின் காரில் வில்லன்கள் பெற்றோலை திறந்து விட்டு காரின் பிரேக் லூசாக செய்துள்ளனர். அதற்கிடையில் முத்துவின் கார் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவரது காரின் மீது முட்டை வியாபாரி ஒருவர் முட்டையை தெரியாமல் போட்டு உடைத்துள்ளார். இதனை பார்த்த அவர் ஏன் அண்ணா இப்புடி பண்ணீங்க நான் என்னோட காரை மகாலட்சுமி மாதிரி வைச்சிருக்கன் இது தான் எனக்கு சோறு போடுது என கூறினார். முட்டைக்காரனும் மன்னிப்பு கேட்டுவிட்டு செல்ல முத்து மீனா இருவரும் காரை கழுவுகின்றனர். பின்னர் முத்து கார் சாவியை கழுவும்போது அவரது நண்பரிடம் கொடுத்துவிட்டு அதை தேடி திரிகின்றார். அதுமட்டுமல்லாமல் மீனாவின் மீதும் பழி சுமத்துகின்றார். பின்னர் அண்ணாமலை வந்து பொறுமையாக அமைதியாக நினைத்துப்பார் கார் சாவியை எங்கே தொலைத்தாய் என தெரியும் என சொல்ல பின் முத்துக்கு நண்பனிடம் கொடுத்த நினைவு வர உடனே அவருக்கு போன் செய்கின்றார்.போன் எடுப்பதற்கு முன்னர் ரவி வந்து சாவியை கொடுத்ததும் முத்து காரை start பண்ண கார் ஸ்டார்ட் ஆகவில்லை மீனா பைக்ல வர சொல்லி கேட்டும் மீனாவை கலாய்த்து விட்டு காரை எடுத்து செல்கின்றார் முத்து திடீரென கார் பிரேக் லூசாகி பிரேக் பிடிக்காமல் போயுள்ளது. எதிரே பாடசாலை மாணவர்களை ஏத்திக்கொண்டு ஒரு ஆட்டோ வர விபத்து நடக்க போகுது என பயந்த முத்து காரை எதிரே இருக்கும் பாதைக்கு திருப்புகின்றார். பின் அங்கே இருந்த போலீஸ்காரர் ஒருவரின் பைக்கில் முத்துவின் கார் மோதி பைக் உடைந்ததை பார்த்த பொலிஸ் முத்துவை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர் .அதன் பின் ரோகிணி மனோஜின் showroom செல்கின்றார். அங்கு ஒரு விலையுயர்ந்த டிவியை ரோகிணி விற்கின்றார். ரோகிணி மனோஜின் அம்மாவின் சொல்லை மீறி கடைக்கு வந்தமையால் மனோஜ் ரோகிணி மீது சத்தம் போடுகின்றார். அதற்க்கு ரோகிணி நீ என் மேல ஒரு நாளுமே அன்பா நடந்து கொண்டதே இல்லை உங்க அம்மா என்ன ஒரு மனிஷியாவே மதிக்கிறாங்க இல்லை என்கூட பேசுறதும் இல்லை கடைசி வரைக்கும் உங்க அம்மா என்கூட பேசாம இருந்தா நீயும் அப்புடியே இருந்துடுவியா..? என பாசமாக கேட்க மனோஜும் ரோகிணியை கவலையுடன் பார்க்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version